Waqfbill || Thirumavalavan || வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வி.சி.க சார்பில் பேரணி
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்று வருகிறது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் பேரணியை முன்னிட்டு, வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளும், பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேரணியைத் தொடர்ந்து தலைவர்கள் உரையாற்றும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. வி.சி.க துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, களப்பணிகளில் ஈடுபட்டனர். முன்னதாக, பேரணி தொடர்பாக திருமாவளவன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், விசிக துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ் பாலாஜி உள்ளிட்ட கட்சி மேலிட பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
