சிறையில் உள்ள சஞ்சய் சிங்... "MPஆக பதவியேற்க கூடாது" மாநிலங்களவைத் தலைவர் எதிர்ப்பு!

சிறையில் உள்ள சஞ்சய் சிங்... "MPஆக பதவியேற்க கூடாது" மாநிலங்களவைத் தலைவர் எதிர்ப்பு!
Published on

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, மாநிலங்களவை தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் என்பவருக்கு அக்கட்சி, மீண்டும் மாநிலங்களை உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது. இதனையடுத்து, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள அவர், பதவி ஏற்பதற்காக நீதிமன்றத்தின் அனுமதியோடு மாநிலங்களவைக்கு சென்றார். ஆனால், சஞ்சய் சிங்குக்கு எதிரான உரிமை மீறல் விவகாரம் நிலுவையில் இருப்பதால், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரின்போது இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகும், அவையில் இருந்து வெளியேறாமல் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததால், சஞ்சய் சிங் மீது உரிமை மீறல் குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com