"ராம் ஜெத்மலானி என்னிடம் பேசியதே கடைசி வார்த்தை" - மாநிலங்களவையில் வைகோ உருக்கம்

ராம்ஜெத்மலானி தன்னிடம் பேசிய வார்த்தைகளே அவர் கடைசியாக பேசியது என மாநிலங்களவையில் வைகோ உருக்கமாக பேசினார்.
"ராம் ஜெத்மலானி என்னிடம் பேசியதே கடைசி வார்த்தை" - மாநிலங்களவையில் வைகோ உருக்கம்
Published on

ராம்ஜெத்மலானி தன்னிடம் பேசிய வார்த்தைகளே அவர் கடைசியாக பேசியது என மாநிலங்களவையில் வைகோ உருக்கமாக பேசினார். மறைந்த உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு கட்சியின் தலைவர்கள் இறந்தவர்கள் உடனான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய வைகோ, நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் அருண் ஜேட்லி என்றார். மாநிலங்களவை உறுப்பினராக தான் பதவியேற்பதற்கு முன் ராம் ஜெத்மலானியை சந்தித்து ஆசி பெற்றதாகவும், அவர் வாழ்க்கையில் கடைசியாக பேசியது தன்னுடன் தான் என்றும் உருக்கமாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com