அமர்நாத் குகைக் கோயிலில் சாமி தரிசனம் : "ஆசிர்வதிக்கப்பட்ட நபராக உணர்கிறேன்"- ராஜ்நாத்

மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நபராக உணர்கிறேன் என பாதுகாப்பு த் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அமர்நாத் குகைக் கோயிலில் சாமி தரிசனம் : "ஆசிர்வதிக்கப்பட்ட நபராக உணர்கிறேன்"- ராஜ்நாத்
Published on
மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நபராக உணர்கிறேன் என பாதுகாப்பு த் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லை பிரச்சினையை தொடர்ந்து, இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். லடாக் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர். வரும் 21ஆம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு குறித்து கேட்டறிந்த ராஜ்நாத் சிங், அதுகுறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் பாதுகாப்புத் துறை தலைமை தளபதி பிபின் ராவத், தளபதி மனோஜ் முகுந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அமர்நாத் தரிசனம் குறித்து டுவிட்டர் செய்துள்ள ராஜ்நாத் சிங், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவான உணர்வதாக கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com