அதிமுக VIP வீட்டில் ரெய்டு - 17 மணி நேர ரெய்டில் சிக்கியது என்ன?

x

பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய 17 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யா பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை காலை முதல், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தினர். சுமார் 17 மணி நேரம் நடந்த இந்த சோதனையில், அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்