ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துள்ளார். அங்கு இந்தியா கூட்டணியின் வெற்றி அரசியலமைப்பின் வெற்றி, ஜனநாயக சுயமரியாதைக்கான வெற்றி என்றார். அரியானாவின் எதிர்பாராத தேர்தல் முடிவை ஆய்வு செய்கிறோம் என்றும், பல தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார். ஆதரவளித்த அரியானா மக்களுக்கும் அயராது உழைத்த கட்சி தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.