ஸ்மிருதி இரானிக்கு சப்போர்ட்டாக வந்த ராகுல்..! காங்கிரஸாருக்கு பறந்த மெசேஜ்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் நிகழ்வது இயல்பான ஒன்று என்றும், பிறரை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளமே தவிர, வலிமை அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்த பிறகு, சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து ட்ரோல்களுக்கு ஆளாகி வருகிறார். முன்னாள் எம்.பி.க்கள் தங்களது அரசு இல்லத்தை காலி செய்து வரும் நிலையில், ஸ்மிருதி இரானி இந்த வார தொடக்கத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com