"இன்றைய இந்தியாவில் எம்எல்ஏ எம்பிகளுக்கு அதிகாரம் இல்லை" - ராகுல் காந்தி

x

இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதம் என்ற தடையை நீக்கி காட்டுவோம் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற அரசியல் சாசன பாதுகாப்பு என்ற நிகழ்வில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வம் அனைத்தும், இரண்டு மூன்று நபர்களின் கைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என அரசியல் சாசனத்தில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். இன்றைய இந்தியாவில் எம்எல்ஏ எம்பிகளுக்கு அதிகாரம் இல்லை என்ற ராகுல் காந்தி, கூண்டில் அடைபட்டுள்ளதாக பாஜக எம்பிக்கள் தன்னிடம் கூறுவதாக வேதனை தெரிவித்தார். நாட்டின் உண்மையான சூழலை அறிந்து கொள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதம் என்ற தடையை நீக்கி காட்டுவோம் என்றார்.

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, தலை சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 15 முதல் 24-ம் தேதி வரை, மூன்றாம் ஆண்டு காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதனையொட்டி, சென்னை தரமணி ஐஐடி ஆராய்ச்சி மைய வளாகத்தில் முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மாபெரும் தேசிய விழாவாக கொண்டாடப்படுவதாகவும், எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இந்த நிகழ்ச்சி பழமை மாறாமல் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும், இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி - தமிழ் சங்கமம் சிறந்த எடுத்துக்காட்டு என கூறிய ஆளுநர், மாநிலங்கள் ஒன்றிணைந்தது தான் இந்தியா என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்