ராகுல் மீதான அவதூறு வழக்கு..! நீதிமன்றம் அதிரடி | rahul gandhi

கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கொலை வழக்கில் தொடர்புடையவர் என ராகுல்காந்தி விமர்சித்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றதால், விசாரணை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த விசாரணையின் போது புகார் தாரரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுல்தான்பூர் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com