``செஞ்சி காட்டுவேன்’’ - நாடாளுமன்றத்தில் ராகுல் எடுத்த சபதம்
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்திக் காட்டுவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், தெலங்கானாவில் விஞ்ஞான ரீதியில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பிற்குப் பிறகு, ஓபிசி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 42 சதவீதமாக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பு மூலமாக மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் கிடைக்கும் என்று கூறிய ராகுல் காந்தி, இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்திக் காட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story
