"விவசாயிகளுக்கு மட்டும் ஏன் `நோ'?"..துண்டால் தலைப்பாகை அணிந்துகொண்டு களமிறங்கிய ராகுல் காந்தி

x

பீகார் மாநிலத்தில், பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, புர்னியா பகுதியில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, துண்டால் தலைப்பாகை கட்டியபடியே விவசாயிகளுடன் பேசினார். விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, மத்திய அரசு அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கு பரிசளிப்பதாக குற்றம் சாட்டினார். பெரும் பணக்காரர்களின் 14 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மத்திய அரசு மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்த ராகுல் காந்தி, விவசாயிகள் அதனை எதிர்த்து துணிச்சலுடன் போரிட்டதன் காரணமாக பின் வாங்கியதாக தெரிவித்தார். நில ஆர்ஜித சட்டத்தை மத்திய அரசு மீறுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, விவசாயிகளின் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருப்பதாக உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்