Rahul Gandhi | 100 நாள் வேலை திட்டம் - நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்த ராகுல்
காந்தியின் சிந்தனைகள் மீது பிரதமர் மோடிக்கு வெறுப்பு இருப்பதாலயே 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்து கட்ட நினைக்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு, விபிஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. மசோதா மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். புதிய மசோதா மூலம் காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும், இந்த புதிய மசோதா மகாத்மா காந்தியின் கொள்கைகளை அவமதிப்பதாகும் என்றார். மோடி அரசு ஏற்கனவே இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை வேலையின்மையால் அழித்துவிட்டது என்றும், இப்போது கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சி என்றும் குற்றஞ்சாட்டினார்.
Next Story
