AI Summit | Rahul Gandhi | ராகுல் காந்திக்கு வந்த கோபம்

ராகுல் காந்திக்கு வந்த கோபம்

#rahulgandhi #congress #aisummit இளைஞர் காங்கிரஸ் போராட்ட வழக்கு டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றம் டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கு, டெல்லி காவல் துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணா ஹரி, குந்தன் யாதவ், அஜய் குமார், நரசிம்மா யாதவ் ஆகிய நால்வர் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டு, 4 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com