பிரபல தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது பாஜக அரசு - ராகுல்காந்தி

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது பாஜக அரசு என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரபல தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது பாஜக அரசு - ராகுல்காந்தி
Published on

குஜராத் மாநிலம், வல்சாத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த 70 வருடங்களாக நன்மை ஏதும் நிகழவில்லை என பிரதமர் மோடி பேசி வருவது காந்தி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், விவசாயிகள் என அனைவரையும் அவமானப்படுத்துவது போல் உள்ளது என்றார். மேலும், காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததாகவும், பாஜக அரசு விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரது கடன்களை தள்ளுபடி செய்ததாக குற்றஞ்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com