Rahul Gandhi | ராகுல் காந்தி நிகழ்ச்சியில் பெண்கள் வெளியேற்றம் - காங்., நிர்வாகிகளுடன் வாக்குவாதம்

Rahul Gandhi | ராகுல் காந்தி நிகழ்ச்சியில் பெண்கள் வெளியேற்றம் - காங்., நிர்வாகிகளுடன் வாக்குவாதம்

Rahul Gandhi | ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெண்கள் வெளியேற்றம் - காங்., நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம்.. மாமல்லபுரத்தில் பரபரப்பு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாமில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ள நிலையில், நிகழ்வுக்கு வந்த சில பெண்கள் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, திருக்கழுகுன்றம் பகுதியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் பெண்கள், நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்றும், பணம் வழங்குவதாக கூறி அழைத்து வந்ததாகவும் குற்றம்சாட்டி, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நிகழ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com