

நாடாளுமன்ற நடவடிக்கையை புறக்கணித்து வெளியேறிய ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் பேசும் போது, இது தமிழக மக்கள் மற்றும் அவர்களின் மொழி சார்ந்த பிரச்சனை என்றும், தங்கள் மொழியை பாதுகாக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளதாகவும் தெரிவித்தார். தங்கள் மொழியை நம்புவதும் அதற்கும் குரல் கொடுப்பதையும் யார் தடுத்தாலும் அதனை ஏற்க முடியாது என்றும் ராகுர்காந்தி தெரிவித்துள்ளார். கேள்வி கேட்க அனுமதிக்கும் நிலையில், துணை கேள்விகளை எழுப்பவும் சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என்றும், ஆனால், சபாநாயகர் தம்மை காயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார். நான் பேசுவதை அவர் விரும்பவில்லை என தாம் புரிந்த கொண்டதாகவும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தமக்கு சில உரிமைகள் உள்ளதாகவும், அதனை சபாநாயகர் பறித்துக் கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். தமிழ் மொழி தொடர்பான துணைக் கேள்வி கேட்க ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் விரும்பிய நிலையில் , அதனை மக்களவை சபாநாயகர் மறுத்துவிட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.