அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்...

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்கள் புடைசூழ பேரணியாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்...
Published on
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட கடந்த 4ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் மற்றொரு தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அப்போது அவருடன் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு தொண்டர்கள் புடைசூழ ராகுல் காந்தி ஊர்வலமாக வந்தார். அப்போது தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com