Rahul Gandhi | Chennai | மாணவர்களின் குரலாக ஒலிக்க சென்னை வருகிறார் ராகுல் காந்தி

மாணவர்களின் குரலாக ஒலிக்க சென்னை வருகிறார் ராகுல் காந்தி

#RahulGandhi #Chennai #Ganapathysivakumar #Congress #TNPolitics #ThanthiTV Rahul Gandhi | Chennai | மாணவர்களின் குரலாக ஒலிக்க சென்னை வருகிறார் ராகுல் காந்தி - இளைஞர்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் அழைப்பு மாணவர்களின் பிரச்சினைகளைப் பேசவும், அவர்களின் குரலாக ஒலிக்கவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தரவுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் இளைஞர்களின் சிந்தனைகளை அறிந்து ராகுல் காந்தி புதிய பாதையை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, மனநலம் போன்ற மாணவர்களின் பல்வேறு பிரச்சினைகளில் ஆளும் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தாத சூழலில், மாணவர்கள் மௌனமாக இருக்காமல் தங்களது கருத்துகளை வெளிப்படையாகப் பேச வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர்களின் குரலை இந்தியாவின் குரலாக ஒலிக்கச் செய்யும் வகையில், 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இன்று சென்னை தீவுத்திடலுக்கு வருகை தருகிறார். எனவே, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதற்கும் அஞ்சாமல், தங்களது கேள்விகளுடனும், கருத்துகளுடனும் இந்த நிகழ்வில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com