அயன்மேனாக ராகுல் காந்தி.. பஞ்சாப்பில் சூடுபிடிக்கும் டிஜிட்டல் பிரசாரம்
பஞ்சாப் தேர்தலுக்காக அவெஞ்சர்ஸ் ஹீரோக்களாக மாறிய காங்கிரஸ் தலைவர்களின் டிஜிட்டல் பிரசார வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகிறது.
பஞ்சாப் தேர்தலுக்காக அவெஞ்சர்ஸ் ஹீரோக்களாக மாறிய காங்கிரஸ் தலைவர்களின் டிஜிட்டல் பிரசார வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகிறது.
சட்டமன்ற தேர்தலையொட்டி பஞ்சாப்பில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
கொரோனாவால் தேர்தல் ஆணையம் விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால், அரசியல் கட்சிகள் டிஜிட்டல் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளனர். அதன்படி, அவெஞ்சர்ஸ் திரைப்பட ஹீரோக்களாக காங்கிரஸ் தலைவர்களை சித்தரித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளது. இதில், தோராக சரண்ஜித்சிங் சன்னியும், ஹல்க் ஆக ராகுல்காந்தியும் இணைந்து, பிரமதர் மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போராடுவது போன்ற வீடியோ வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
