

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி, அவதூறாக பேசியதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ், சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி, ராகுல்காந்தி இன்று நேரில் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையை, வரும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குறித்து விமர்சித்து பேசியதற்காக ராகுல் காந்தி மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் தொடர்ந்த அவதூறு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் நாளை ஆஜராகுமாறு, ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியுள்ளது.