

ரஃபேல் விவகாரம் தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலாளார் முரளிதரராவ் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு பாஜகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு மாநில தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் உறுதி அளித்தார்.