Minister CTR | RadhaKrishnan | ஓய்வு பெறவுள்ள நிலையில்.. ராதாகிருஷ்ணன் IASக்கு பவர்ஃபுல் பொறுப்பு
TNEB | Minister CTR | RadhaKrishnan | ஓய்வு பெறவுள்ள நிலையில்.. ராதாகிருஷ்ணன் IASக்கு பவர்ஃபுல் பொறுப்பு #TNEB #MinisterNirmalKumar #RadhaKrishnan தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மின் கட்டணம் நிர்ணயம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் இந்த ஆணையத்தில், தலைவர் மற்றும் இரு உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்த நிலையில், புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று பதவிகளுக்கும் புதியவர்களை தேர்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி டீக்கா ராமன் தலைமையில் தேர்வுக்குழுவை தமிழக அரசு கடந்த ஜூலையில் அமைத்தது. இக்குழு, பலரிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றது. இதையடுத்து நீதிபதி டீக்கா ராமன் தலைமையிலான தேர்வுக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ராதாகிருஷ்ணன் தலைவராகவும், மாஸ்கர்னஸ் உறுப்பினராகவும், முத்து சாரதா சட்ட உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ராதாகிருஷ்ணன், இம்மாத இறுதியில் ஓய்வுபெற இருந்த நிலையில் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
