Dayanidhi maran | நாடாளுமன்றத்தில் எம்.பி தயாநிதி மாறன் கேட்ட கேள்வி
சிறு குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான குருவை நெல் கொள்முதலின் முன்கூட்டிய மதிப்பீடு, கூடுதல் நெல் இருப்பு, பொது விநியோக திட்ட சேமிப்பு கிடங்குகளில் ஏற்படும் கூடுதல் சுமை குறித்த விவரங்கள் பற்றி அவர் கேள்வி கேட்டுள்ளார். மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகள், நெல் அறுவடைக்கு பின்பு வீணாகும் நெல்களின் மதிப்பு பற்றி விளக்கம் கேட்டுள்ளார். இதேபோல அதிகரித்துள்ள நீர்ப்பாசன தேவைகளுக்கேற்ப நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பன உள்ளிட்டவை குறித்தும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.
Next Story
