எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி புழல் சிறையில் இருந்து 67 கைதிகள் விடுதலை..

சென்னை புழல் சிறையில் இருந்த 67 கைதிகள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை புழல் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வந்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறைத்துறை சார்பில் பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. விடுதலையான கைதிகளை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com