பாஜகவில் இணையும் Ex முதல்வரின் மனைவி? | BJP | Congress

 பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கெளர் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் பின்னர், பஞ்சாப் லோ காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை தொடங்கி அதனை பாஜக உடன் இணைத்தார். இந்த நிலையில் காங்கிரசை விட்டு வெளியேறிய தனது கணவர் அமிரிந்தர் சிங்கிற்கு தனிக் கட்சி தொடங்க உதவியதற்காக காங்கிரசில் இருந்து பிரனீத் கெளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் தற்போது பாஜகவில் இணைய உள்ளார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பட்டியாலா தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com