பஞ்சாப் மாநிலத்தில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சண்டிகரில் உள்ள முதலமைச்சர் அமரீந்தர் சிங் வீட்டின் முன்பு, ஆம் ஆத்மி மாநில தலைவர் பகவத் மண் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்றனர். அப்போது போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். எனினும் அவர்கள் கலைய மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.