புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...

புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...
Published on
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க.வின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்காக, புதுச்சேரி மக்களின் நலனை புறக்கணிக்கும் வகையில் நிதி மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். இதுபோன்று திட்டமிட்டு உருவாக்கிய "நிதி நெருக்கடியால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியத்துவம் பெறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும், அதுவரை முதலமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிடுவதை நிறுத்துமாறு ஆளுநர் கிரண்பேடிக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எனவே, உடனடியாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும், அதுவரை முதலமைச்சரின் அதிகாரங்களில் குறுக்கிடுவதை நிறுத்துமாறு ஆளுநர் கிரண்பேடிக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com