Puducherry | LJK | புதுச்சேரி சர்வதேச செஸ் போட்டியை தொடங்கி வைத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி சர்வதேச செஸ் போட்டியை தொடங்கி வைத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரியில் நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியின் முதல் சர்வதேச கிளாசிக்கல் செஸ் போட்டியான இது, சாதுர்யோகா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. வரும் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்க விழாவில், ஜோஸ் சார்லஸ் மார்டினின் சமூக சேவைகளை குறிப்பிட்டு, தனுஸ்ரீ என்ற பள்ளி மாணவி வாசித்த கவிதை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து பேசிய ஜோஸ் சார்லஸ் மாட்டின், செஸ் வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
