

புதுச்சேரி மாநிலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் அடுத்த மாதம் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்ததுள்ள நிலையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.