

புதுச்சேரியில் எம்.எல்.ஏ ஒருவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து, தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தனவேலு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சமீபத்தில் அரசு மீதும், முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராகவும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எம்.எல்.ஏ தனவேலுவை, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக, அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.