புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா - சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

புதுச்சேரி முதலமைச்சர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா - சட்டமன்ற வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு
Published on
புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, 49 வயது மதிக்கத்தக்க அந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அவருடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி சட்டமன்ற வளாகம் முழுவதும் சுகாதார துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு முதல்வர் அலுவலகம் உட்பட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. மேலும் தெர்மா ஸ்கேனர் மூலமாக பரிசோதனை செய்த பிறகே, சட்டமன்ற வளாகத்திற்குள் ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com