"அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
"அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
Published on

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மூலம் 29 ஆயிரம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவர் என கூறிய அவர், அரசின் நகரமைப்பு குழும ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com