"கருப்பு கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" - தமிழிசை

"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் வருகை"

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவை குறை சொல்லி கேலி பேசுபவர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பொது கூட்டம் பதில் சொல்லும் என்றும், அது அரசியல் திருப்பு முனையாக அமையும் என்றும் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com