"பாகிஸ்தானை வெல்ல 10 அல்லது 12 நாட்கள் போதும்" - பிரதமர் நரேந்திர மோடி

அண்டை நாடான பாகிஸ்தானை வெல்ல,10 அல்லது 12 நாட்கள் போதுமானது என பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தானை வெல்ல 10 அல்லது 12 நாட்கள் போதும்" - பிரதமர் நரேந்திர மோடி
Published on

நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் என்.சி.சி அமைப்பை சேர்ந்த மாணவர்கள், டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில், பிரதமர் மோடி முன்னிலையில் அணிவகுப்பு மரியாதை நடத்தினர். இதனை ஏற்றுக் கொண்டு அவர்கள் மத்தியில் மோடி உரையாற்றினார். அப்போது அவர், இளைஞர்களின் தன்னம்பிக்கையும், அயராத உழைப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம் என்றார். காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் அதை 3 குடும்பங்கள், மேலும் மேலும் வளர்த்ததாக புகார் கூறினார். இதுபோல, பாகிஸ்தானை வெல்ல,10 அல்லது 12 நாட்கள் போதுமானது என்றும், ஏற்கனவே 3 முறை போரில் தோற்கடித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com