காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன...?" ப.சிதம்பரம் கூறியதை சுட்டிக் காட்டிய மோடி

காங்கிரஸ் கட்சி, ஒவ்வொரு மாநிலத்திலும் வீழ்ச்சியடைந்து வருவதற்கு, 20 ஆண்டுகளுக்கு முன் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துகளை பிரதமர் மோடி, தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.
காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம் என்ன...?" ப.சிதம்பரம் கூறியதை சுட்டிக் காட்டிய மோடி
Published on

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் காங்கிரஸ் வலுவிழந்து போவதற்கான காரணம் என்ன தெரியுமா...? அந்த கட்சியை சேர்ந்த ஒருவரே இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அதை உங்களுக்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த தலைவர் சொன்னார். 'காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்த மாநிலத்தில் இருந்து வந்தவன் நான்' என்றார். மேல்சாதிக் காரர்கள் மற்றும் பணம் படைத்தவர்களிடம் இருந்து ஏழை, நடுத்தர மற்றும் குரலற்றவர்களிடம் அதிகாரம் சென்று விட்டது என்பதை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்ளவில்லை என்று அவர் கூறி இருந்தார்.

எங்கெல்லாம், அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களிடம் ஜனநாயக ரீதியாக அதிகாரம் நகருகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த கருத்துகளை தெரிவித்தது யார் தெரியுமா? 1997ம் ஆண்டு இதே நாடாளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் தேவகவுடா, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தபோது, உங்களின் (காங்கிரஸ்) மெத்தப்படித்த தலைவரான ப.சிதம்பரம் தான் இதையெல்லாம் கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com