காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

x

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டவர் குமரி அனந்தன் எனத் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக முக்கிய பங்காற்றிய குமரி அனந்தனின் மறைவு வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்