இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்றும், அவரது தைரியமும் நீதியும் தனித்து நிற்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிதமது பதிவில், இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதிக்கான அவரது உறுதிப்பாட்டையும் நினைவில் கொள்வோம் என கேட்டுக் கொண்டுள்ளார்.