

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வருகிற 17ம் தேதியாகும். இதையொட்டி இன்று முதல் ஒரு வாரத்துக்கு 'சேவை வாரமாக' பாஜகவினர் கொண்டாட உள்ளனர். அதன் ஒரு கட்டமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேவை செய்யும் நிகழ்ச்சி மற்றும் நோயாளிகளுக்கு உதவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா, விஜய் கோயல், பர்வேஷ் வர்மா, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், விஜேந்திர குப்தா, கவுதம் கம்பீர், மீனாட்சி லேகி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்று நோயாளிகளுக்கு பழங்களை வழங்கினார்கள்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை வளாகங்களில் செய்தனர். பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி இந்த வாரம் முழுவதும் ஒவ்வொரு பாஜக தொண்டர்களும் இதுபோன்ற பல்வேறு சேவைகளில் ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.