

கொரோனா போராட்டத்தில், முன்னின்று போராடும், சுகாதார பணியாளர்களை பாதுகாக்கும் பொருட்டு, தொற்று நோய் அவசர சட்டத்திருத்தம் 2020 கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளார்.