நமீபியா நாட்டிற்கு பிரதமர் மோடி நன்றி

x

இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்த உதவியதற்கு நமீபியா நாட்டிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கும் பாக்கியம் தமக்கு கிடைத்ததாகவும், தற்போது இந்தியாவில் சிவிங்கி புலிகள் இனப்பெருக்கம் செய்து நன்றாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்திய நிலப்பரப்பில் முற்றிலும் அழிந்துவிட்ட உயிரினமான சிவிங்கிப் புலிகள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2023ம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்