பிரதமர் மோடி கையில் உலகையே புரட்டி போடும் ``ரகசியம்'' -உலகின் கண்கள் இந்தியா பக்கம்

x

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் செமிகான் இந்தியா என்ற செமிகன்டக்டர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

3 நாள் நடைபெறும் இம்மாநாட்டில், 48 நாடுகளைச் சேர்ந்த 20,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில், விக்ரம் 32-பிட் Microprocessor மற்றும் நான்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் சோதனை சிப்-களை பிரதமர் மோடியிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 7 புள்ளி 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

உலகின் முன்னேற்றத்துக்கு செமிகன்டக்டர் சிப் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அவர், வரும் ஆண்டுகளில் செமி-கண்டக்டர் சந்தை 1 டிரில்லியன் டாலர்களைக் கடக்கும் என கணித்தார்.

மேலும், 10 செமி-கண்டக்டர் திட்டங்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தியா முதலீடு செய்வதாகவும்,

கச்சா எண்ணெய் என்பது கருப்பு தங்கம் என்றால், செமிகன்டக்டர் சிப் டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி உவமையுடன் ஒப்பிட்டார்.

அந்த வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறிய சிப்புகள், உலகில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்