அய்யோ மீண்டும் மீண்டுமா? பிரஸ்மீட்டில் நழுவிய பிரேமலதா

x

அய்யோ மீண்டும் மீண்டுமா?

பிரஸ்மீட்டில் நழுவிய பிரேமலதா

மாநிலங்களவை உறுப்பினர் தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளிக்காமல் நழுவினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஒருங்கிணையுமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அதை ஓபிஎஸ் இடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார். மேலும், ராஜ்யசபா சீட் குறித்த கேள்விக்கு, மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறீர்கள் என்று கூறிய அவர், கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச்சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்