Premalatha Vijayakanth Speech | விஜயகாந்தின் பிறந்தநாள் தேதியை மாற்றி சொன்ன பிரேமலதா - கூட்டத்தில் இருந்து கத்திய தொண்டர்கள்

Premalatha Vijayakanth Speech | விஜயகாந்தின் பிறந்தநாள் தேதியை மாற்றி சொன்ன பிரேமலதா - கூட்டத்தில் இருந்து கத்திய தொண்டர்கள்

கிருஷ்ணகிரி அருகே நடந்த தேமுதிக நிகழ்ச்சியில் விஜயகாந்தின் பிறந்தநாள் தேதியை, பிரேமலதா விஜயகாந்த் மாற்றி கூறியதால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர். வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெடுசாலை கிராமத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்தநாள் என்று கூறுவதற்கு பதிலாக, டிசம்பர் 25ஆம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் அன்று நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒரு சிலர், டிசம்பர் மாதம் அல்ல ஆகஸ்டு மாதம் என்று முனுமுனுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com