"தேமுதிக கட்டமைப்பு வலிமை மிக்கது" - பிரேமலதா விஜயகாந்த் ( தேமுதிக பொருளாளர் )
தேமுதிகவின் கட்டமைப்பு என்றுமே வலிமை மிக்கது தான் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம் என கூறிய அவர், தோல்வியை கண்டு துவண்டு போகும் கட்சி தேமுதிக அல்ல என கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
