Premalatha vijayakanth || DMDK || 2026 கூட்டணி.. பிரேமலதா ஸ்ட்ரிக்ட் உத்தரவு

x

கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளிடம் பிரேமலதா ஒவ்வொரு கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடம் பேசிய பிரேமலதா கட்சி வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுமாறு, நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம் என நிர்வாகிகளுக்கு பிரேமலதா உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்