"உப்பளம், பனைத் தொழில் பாதுகாக்க நடவடிக்கை" - தமிழிசையை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் உப்பளம், பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.
"உப்பளம், பனைத் தொழில் பாதுகாக்க நடவடிக்கை" - தமிழிசையை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
Published on
தூத்துக்குடி தொகுதியில், தமிழிசை சௌந்தரராஜன் வெற்றி பெற்றால் உப்பளம், பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார். தூத்துக்குடி மக்களவை தொகுதி, பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து கோவில்பட்டியில் பேசிய அவர், தூத்துக்குடியில் உப்பளம், பனைத்தொழில் பாதுகாக்கப்பட்டு, நவீனப்படுத்தப்படும் என்றும், அதன் மூலம் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். மீன்பிடி தொழிலை நவீனமாக்கி மீனவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதுடன், வர்த்தக மையம் அமைத்து வியாபாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றும் பிரேமலதா கூறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com