"பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை" - ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தகவல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை" - ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Published on
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது,. பிரணாப் முகர்ஜி அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாக ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை தெரிவித்துள்ளது, தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரணாப் முகர்ஜி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்,.
X

Thanthi TV
www.thanthitv.com