

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகளுக்கு, வாக்காளர்கள் மீண்டும் மீண்டும் தங்களது வாக்கு மூலம் ஆதரவு தெரிவிப்பது அனைத்து தரப்புக் கருத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது தான் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு கருத்தரங்கில் பேசிய அவர், இந்த எச்சரிக்கையை அரசியல் கட்சிகள் மறந்து விடுவதால், அவர்களை மீண்டும் மாற்றும் பணியை வாக்காளர்கள் தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை நிலையான ஆட்சி அமைக்க உதவும் என்றும், அதேநேரம் பெரும்பான்மை அரசை அமைக்க இதுவரை இந்திய மக்கள் எந்த கட்சிக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்களிக்க வில்லை என்றும் தெரிவித்தார்.