பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி | Prajwal Revann | Thanthitv

கர்நாடகாவை உலுக்கிய பிரஜ்வல் ரேவண்ணா, சூரஜ் ரேவண்ணா பாலியல் வீடியோ விவகாரத்தில், வீடியோவை விரிவாக காட்சிப்படுத்தியதாக கன்னட தனியார் செய்தி சேனலுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையில் கருத்துரிமையை பறிப்பது நோக்கமாக இருக்கிறது என விமர்சித்த உச்சநீதிமன்றம், கருத்துரிமையை பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என அறிவுறுத்தியது. தனியார் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டது அரசியல் பழிவாங்கல் என்பது தெளிவாகிறது என குறிப்பிட்ட நீதிபதி, செய்தி நிறுவனத்திற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த ஒளிபரப்பு தடைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com