``நடவடிக்கை எடுக்காவிட்டால் விஜய் தலைமையில் போராட்டம் வெடிக்கும் ''..களத்தில் இறங்கிய தவெகவினர்| TVK
விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு தவெகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மேலும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் விஜய் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கோவை,திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ள தவெகவினர் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
Next Story